முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

முத்தியால்பேட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். மோட்டார் ரீவைண்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் சித்ரா வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மின்விசிறி கொக்கியில் சேலையால் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com