கீரைத்துறையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

மதுரை கீரைத்துறை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீரைத்துறையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை கீரைத்துறை அருகே உள்ள புதுமாகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மகள் ராகவி (வயது19). தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளாங்குடி வின்சென்ட் சாலை அன்னை தெரசா 2-வது தெருவைச் சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் பிரபு (26). இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவர் வாங்கி கொடுக்காததால் மனவேதனை அடைந்த பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com