அரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

அரூர் அருகே நோயால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கே.வேட்ரம் பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட வேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். கூலித்தொழிலாளியான இவருக்கு தமயந்தி (வயது29) என்ற மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தமயந்திக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் நீண்ட நாட்களாக அவதியடைந்து வந்தார். இதனால் அவர் பலமருந்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த தமயந்தி நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தமயந்தியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தமயந்தி வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றுள்ளார். அவரை அரூர் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com