திருவட்டார் அருகே இளம்பெண்ணை வழிமறித்து கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

திருவட்டார் அருகே இளம்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார் அருகே இளம்பெண்ணை வழிமறித்து கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
Published on

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள அன்புவிளை குட்டக்குழி பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன். இவரது மனைவி ஜினி(வயது29).

அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலையில் ஜினி வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

நேற்று மாலையும் வழக்கம் போல முந்திரி தொழிற் சாலையில் வேலை முடிந்து ஜினி வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(21) என்ற வாலிபர் அங்கு வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

அவரை ஜினி கண்டித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் கட்டையால் ஜினியை தாக்கி உள்ளார். இதற்கு அவரது தந்தை கபிரியேல் உடந்தையாக இருந்து உள்ளார். இதில் காயம் அடைந்த ஜினி திருவட்டாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தன்னை தாக்கியது பற்றி ஜெயக்குமார் மற்றும் கபிரியேல் மீது திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார்.

இது பற்றி 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை கபிரியேலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com