போச்சம்பள்ளி அருகே இளம்பெண் கொலையா?- போலீசார் விசாரணை

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் கொலையா?- போலீசார் விசாரணை

போச்சம்பள்ளி அருகே வீட்டில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வெப்பாளம் பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் பாண்டிச்சேரியில் சுவீட் மாஸ்டராக தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது21). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக மணி சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு நடந்ததாக தெரிகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து கவுசல்யா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கவுசல்யா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி 4 வருடம் ஆனநிலையில் கவுசல்யா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. சரவணன் விசாரணை நடத்திய பிறகு தான் முழுவிபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com