

தாடிக்கொம்பு:
திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு, வேடசந்தூர், வடமதுரை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் மில்கள் செயல்படுகின்றன. இங்கு உள்ளூர் மக்களை தவிர அதிகளவில் வெளிமாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சம்பளமும் குறைவாக கேட்பதால் அதிகளவில் இவர்களே உள்ளனர். இங்கு பணிபுரியும் வடமாநில இளைஞர்கள் அங்கு வேலை செய்யும் உள்ளூர் பெண்களிடம் சகஜமாக பழகி காதல் வலை வீசுகின்றனர்.
ஏழை பெண்களே பெரும்பாலும் மில்வேலைக்கு வருவதால் எளிதில் இவர்கள் வடமாநில இளைஞர்களிடம் வீழ்ந்து விடுகின்றனர்.
வடமதுரை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வடமாநில இளைஞர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதேபோல் தாடிக்கொம்பு பகுதியிலும் மில்வேலை பார்க்கும் வடமாநில இளைஞர்கள் மாலை வேளையில் அங்குள்ள பஸ் நிறுத்தம் வந்து மது அருந்தி போதையில் பெண்கள், மாணவிளை கேலி செய்து சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களிடம் காதல் வலையில் சிக்கும் இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுகின்றனர்.
ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். பஸ் நிறுத்தம் வரும் வடமாநில இளைஞர்களிடம் உள்ளூர் மக்கள் தட்டிகேட்டால் கும்பலாக வந்து அடிதடியில் ஈடுபட்டுகின்றனர்.
மேலும் வடமாநிலத்தவர்கள்தான் பெரும்பாலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களை கண்காணிக்க போலீசாரும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
வடமாநில இளைஞர்களை வேலைக்கு சேர்க்கும் நிர்வாகத்தினர் அவர்களை பற்றிய தகவல்களை முறையாக பராமரிக்கவேண்டும் எனவும், மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.