செய்துங்கநல்லூர் அருகே இளம்பெண் பலாத்காரம்: வாலிபர் கைது

செய்துங்கநல்லூர் அருகே இளம்பெண் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூர் அருகே தாதன்குளத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும், அதே ஊரை சேர்ந்த மூர்த்தி (வயது 30) என்பவரும் பழகி வந்தனர். இதையடுத்து அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து மூர்த்தி தலைமறைவானார்.

இதுகுறித்து அந்த பெண் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி, மூர்த்தி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தார்.

இந்நிலையில் மூர்த்தியின் உறவினர்கள் அந்த பெண் வீட்டை தாக்கினர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமன் ராஜன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியின் சகோதரர்கள் மாரியப்பன்(32), சுடலை(28) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான மூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பெஞ்சமின், குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் மூர்த்தியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com