கேரளாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

கேரளாவில் பெண் குளித்துக்கொண்டிருந்த காட்சியை ஆபாச படம் எடுத்து மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே பாறசாலை ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஷெகின்(வயது24). இவரது பக்கத்து வீட்டில் திருமணமான ஒரு பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்த போது நைசாக அவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஷெகின் அந்த பெண் குளித்துக்கொண்டிருந்த காட்சியை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார். அதன்பிறகு ஆபாச படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஷெகின் கற்பழித்தார்.

இந்த கொடுமை பல நாட்கள் தொடர்ந்தது. இதனால் அந்த பெண் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதால் தனது வீட்டை அங்கிருந்து மாற்றி விட்டு நெய்யாற்றின்கரை பகுதிக்கு சென்று விட்டார்.

ஆனால் வாலிபர் ஷெகின் அங்கும் சென்று அந்த பெண்ணை தனது ஆசைக்கு பலியாக்கினார். சில மாதங்களாக அவரது கொடுமை அதிகமானதால் தனது கணவரிடம் இதுபற்றி கூறி இளம்பெண் அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் இதுபற்றி பாறசாலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திலீப் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ஷெகினை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஆபாச படம் அடங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கோழிக்கோடு நடக்காவு பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலை வழியாக பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் பெண்களை ஒரு வாலிபர் வழிமறித்து செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்யாததால் அவரது அட்டகாசம் தொடர்ந்தது.

இந்த நிலையில் அந்த வாலிபரின் அத்துமீறல் பற்றி பாதிக்கப்பட்ட ஒரு பெண் போலீசில் புகார் செய்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா மூலம் விசாரணை நடத்தி சில்மி‌ஷ வாலிபரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

அவரது பெயர் சம்ஷீர் (33). நடைக்காவு பகுதியைச் சேர்ந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com