இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர்- தந்தை போலீசில் புகார்

திருவண்ணாமலை இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர்- தந்தை போலீசில் புகார்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை டவுன் தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மகளுக்கும், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு அந்த பெண் பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அந்த பெண்ணை அவர் பெங்களூருவிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

அந்த பெண் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், அந்த பெண்ணின் ஆபாச படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். அவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூரு வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com