தருமபுரியில் இளம்பெண் மர்ம மரணம்

தருமபுரியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மரணம்
மரணம்
Published on

தருமபுரி:

தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் நார்த்தம் பட்டியை சேர்ந்த சந்தியா (வயது22) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று கோபித்து கொண்டு சந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று சபரி குடும்பம் நடத்த சந்தியா வீட்டிற்கு தனது உறவினர்களுடன் சென்று பேச்சுவார்த்தைநடத்தினார். அப்போது பெரியோர்கள் பேசி முடிவு எடுத்து சந்தியாவை சபரி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சபரிக்கும் சந்தியாவிற்கும் இடையே மீண்டும் நேற்று தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த சந்தியாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் இறந்ததால் இந்த சம்பவம் குறித்து தருமபுரி சப்-கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com