உ.பி.: கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை சந்திக்கிறார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சியின் தலைவரின் குடும்பத்தினரை உத்தரபிரதேச முதல்மந்திரி நாளை சந்திக்கவுள்ளார்.
கம்லேஷ் திவாரி மற்றும் யோகி ஆதித்யநாத்
கம்லேஷ் திவாரி மற்றும் யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். 

இதற்கிடையே, நேற்று மதியம் லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள  கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை உத்தர பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நாளை சந்திக்க உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com