முன்னாள் முதல் மந்திரி என்.டி.திவாரியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ள முன்னாள் முதல் மந்திரி என்.டி.திவாரியை, உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முன்னாள் முதல் மந்திரி என்.டி.திவாரியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ள முன்னாள் முதல் மந்திரி என்.டி.திவாரியை, உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்தியாவில் இரு மா     நிலங்களில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்.டி.திவாரி. ஒருங்கிணைந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒரு முறையும் என்.டி. திவாரி பதவி வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

92 வயதாகும் என்.டி. திவாரிக்கு கடந்த செப்டம்பரில் மூளை அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி சாகெட் பகுதியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் திவாரியின் உடல் நிலை மோசமானதால் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் என்.டி.திவாரியை உத்தரப்ப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

அவர் டாக்டர்களிடம், திவாரிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். விரைவில் நலம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது திவாரியின் உறவினர்களும் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com