மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி

தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீசாருக்கு யோகா பயிற்சி
போலீசாருக்கு யோகா பயிற்சி
Published on

அன்னவாசல்:

தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணி, இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் சதீஷ்குமார் பயிற்சி அளித்தார். இதில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், காரையூர் ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com