ஏமன் மக்களை சூறையாடும் காலரா நோய்: அவசரநிலை பிரகடனம்

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் பிடியில் உள்ள சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் பரவி வருவதால் நாட்டின் தலைநகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏமன் மக்களை சூறையாடும் காலரா நோய்: அவசரநிலை பிரகடனம்
Published on

சனா:

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதியில் இருந்து நேற்றுவரை இந்நோய்க்கு ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் மூவாயிரம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதிபருக்கு எதிரான உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் சுமார் 76 லட்சம் மக்கள் காலரா அபாயத்துக்குட்பட்ட பகுதிகள் வசித்து வருவதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையான 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com