

பெண்களுக்கான டென்னிஸ் அசோசியேசன் சார்பில் உலக டென்னிஸ் பைனல்ஸ் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியில் நான்கு பேர் இடம்பெறுவார்கள். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பேர் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
‘ஒயிட் (White) பிரிவில் இடம்பிடித்துள்ள கரோலினா பிளிஸ்கோவா, பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.