பொள்ளாச்சி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலை கைவிட முடியாத விரக்தியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அழகப்பா மில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). கூலி தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த அருண் குமாரின் குடும்பத்தினர் கள்ளக் காதலை கைவிடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அருண்குமார் கள்ளக்காதலை கைவிட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் பொள்ளாச்சி ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட அருண் குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com