ஆத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு

ஆத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

திண்டுக்கல்:

ஆத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரசாத் (வயது25). இவர் காந்திகிராமம் அண்ணாநகரில் உள்ள மெத்தை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (22). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். 

இந்த நிலையில் வேலை விஷயமாக மெத்தை நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் (25) என்பவர் பிரசாத்தின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது சாந்திக்கும், விஜயகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை பிரசாத் கண்டித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் தனது நண்பர்கள் மகேஸ்வரன், உதயகுமார், மதன்குமார் ஆகியோருடன் சேர்ந்து பிரசாத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இது பற்றி செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com