எங்களை தேடினால் வேறுமாதிரி முடிவை எடுப்போம் - கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பம்

நகைகளை மீட்க முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
கடிதம் எழுதிவிட்டு மாயமான யஷ்ணன்-ரிஜானா மற்றும் மகன்
கடிதம் எழுதிவிட்டு மாயமான யஷ்ணன்-ரிஜானா மற்றும் மகன்
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் யஷ்ணன் (வயது 32). மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி பெயர் ரிஜானா (வயது 26). 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

யஷ்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் மகன் 3 பேரும் திடீரென மாயமானார்கள்.

மேலும் அவர்க் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர்.

அந்த கடிதத்தில் “எங்களை யாரும் தேட வேண்டாம். கடன்-நகைகளை மீட்க முடியாததால் நாங்கள் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்கிறோம்.

எங்களை தேட எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் அப்படி தேடினால் நாங்கள் வேறு மாதிரி முடிவு எடுப்போம்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com