2020 டோக்கியோ ஒலிம்பிக்கான இடத்தை உறுதி செய்தனர் பஜ்ரங் புனியா, ரவி குமார்

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, ரவி குமார் ஆகியோர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடர் பங்கேற்க தகுதி பெற்றனர்.
ரவி குமார், பஜ்ரங் புனியா
ரவி குமார், பஜ்ரங் புனியா
Published on

கஜகஸ்தானில் உள்ள நுர்-சுல்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 65 கிலோ எடைபிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வடகொரியாவின் ஜாங் சன்-ஐ எதிர்கொண்டார். இதில் 8-2 என பஜ்ரங் புனியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அடுத்த வருடம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

57 கிலோ எடைப்பிரிவில் ரவி குமார் ஜப்பானைச் சேர்ந்த யுகி தகாஹாஷியை எதிர்கொண்டார். இதில் ரவிகுமார் 6-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இவரும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.

பஜ்ரங் புனியா அரையிறுதியில் கஜகஸ்தானைச் சேர்ந்த நியாஸ்பெகோவ்-ஐ எதிர்கொள்கிறார். ரவி குமார் ரஷியாவைச் சேர்ந்த ஜவுர் யுகுயேவ்-ஐ எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com