16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை - பிரிட்டன் அரசு அதிரடி

4வது நாடாக பிரிட்டன், புதிய சட்டத்தை கொண்டு வந்து இந்த தடையை அறிவித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை - பிரிட்டன் அரசு அதிரடி
Published on

16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த பிரிட்டன் அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

கடந்த 2025 டிசம்பரில், உலகிலேயே முதன் முறையாக 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா அமல்படுத்தியது.

அதை பின்பற்றி இந்தோனேசியா மற்றும் மலேசியா அதேபோன்ற சட்டத்தை கொண்டுவந்தன. தற்போது உலகின் 4வது நாடாக பிரிட்டன், புதிய சட்டத்தை கொண்டு வந்து இந்த தடையை அறிவித்துள்ளது.

தடை

பிரிட்டன் ஆஸ்திரேலியாவை விட ஒரு படி மேலே சென்று பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது ஆன்லைன் கேம்களில் முன்பின் தெரியாதவர்களுடன் உரையாடும் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியை சிறுவர்கள் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

மேலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வரம்புகளையும் தனது சட்டத்தில் பிரிட்டன் சேர்ந்துள்ளது.

கருத்து

இந்த தடையை அறிவித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, குழந்தைகளின் நலனுக்கு முதலிடம் கொடுத்து இந்தத் துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக பிரிட்டன் அரசு கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தியது. அதில் பங்கேற்ற பெற்றோர்களில் 90% இந்த தடையை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com