Strait of Hormuz விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் உதவாவிட்டால்... டிரம்ப் இறுதி எச்சரிக்கை

trump
trump
Published on
Summary

ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற நேட்டோ உதவா விட்டால் மிகவும் மோசமான எதிர்காலம் ஏற்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணை கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

இதற்கிடையே கச்சா எண்ணை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்பட 7 நாடுகள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். இந்த நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

போர்க்கப்பலை அனுப்புவதாக வெளியான தகவலை பிரான்ஸ் மறுத்து உள்ளது. இது குறித்து வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் விமானம் தாங்கி கப்பலும், அதைச் சார்ந்த தாக்குதல் படைக் குழுவும் கிழக்கு மத்தியத ரைக் கடலிலேயே தொடர்ந்து நிலைத்து இருக்கும். தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே ஆகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, ‘மோதல் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

டிரம்ப்பின் வேண்டு கோளை சீனா ஏற்றுக் கொண்டு செயல்படுமா என்பதை அவர் திட்ட வட்டமாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும் நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, "நாங்கள் முன்பே தெரிவித்தது போல, இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் நட்பு நாடுகளுடனும் கூட்டாளிகளுடனும் பல்வேறு வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்றார்.

டிரம்ப்பின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் உடனடியாகத் தனது கடற்படைக் கப்பல் களை அனுப்பாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, ‘ஜப்பான் தனது நடவடிக்கைகளைத் தானே தீர்மானித்துக்கொள்கிறது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதே எங்களின் அடிப்படை கொள்கையாகும்’ என்றார்.

தென் கொரியாவும் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தப் பதிலையும் வெளியிட வில்லை. இந்த நிலையில் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற நேட்டோ உதவா விட்டால் மிகவும் மோசமான எதிர்காலம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா எவ்வாறு உதவியதோ அதுபோல் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும். ஐரோப்பிய நாடுகள் உதவுவதை நான் எதிர்பார்க்கிறேன்.

எந்த பதிலும் இல்லை என்றால் அல்லது எதிர்மறையான பதிலாக இருந்தால் அது நேட்டோவின் எதிர் காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உச்சி மாநாட்டுக்கு முன்பு இதை தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

சீனா தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாக பெறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா மிக குறைந்த அளவே பெறுகிறது. இதே போல் அமெரிக்காவை விட பல ஐரோப்பிய நாடுகளும் வளைகுடாவில் இருந்து வரும் எண்ணையை அதிகமாக நம்பி உள்ளன. இந்த மோசமான விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com