பாகிஸ்தான் பள்ளிவாசலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

ஜாமியா பள்ளிவாசலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
Published on

பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com