இலங்கை அதிபர் திசநாயக டிசம்பர் 15-ம் தேதி இந்தியா வருகை

இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.இலங்கை அதிபர் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கிறார்.
இலங்கை அதிபர் திசநாயக டிசம்பர் 15-ம் தேதி இந்தியா வருகை
Published on

கொழும்பு:

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்திய பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com