ஹிரோஷிமா.. உலகம் இன்னும் கடந்த போக முடியாத தினம்

'லிட்டில் பாய்' என்ற அணு குண்டை ஹிரோஷிமா நகரின் மீது வீசியது.
ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள்
ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள்
Published on

அது இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். இன்றைப் போன்றதொரு ஆகஸ்ட் 6. ஆண்டு 1945. மனித விழுமியங்கள் அனைத்தையும் மறந்து அமெரிக்கா செய்த காரியம் மனித வரலாற்றிலேயே கரும்புள்ளியாக நாள்.

அச்சு நாடுகளின் கூட்டணியில் அங்கம் வகித்த ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசியது நேச நாடான அமெரிக்கா.

அந்த அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மனிதர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்றுடன் இந்த கோரம் நடந்து 81 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2026 ஹிரோஷிமா தினத்தின் மையக்கரு, "Remembrance, Responsibility and Resilience" என்பதாகும்.

அதாவது பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அணுஆயுதங்களற்ற அமைதியான உலகை நோக்கி உழைப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

அணுகுண்டு தாக்குதல்

1945, ஆகஸ்ட் 6, ஹிரோஷிமாவில் காலை 8.15 மணி: அமெரிக்காவின் Enola Gay என்ற B-29 ரக போர் விமானம்

'லிட்டில் பாய்' என்ற அணு குண்டை ஹிரோஷிமா நகரின் மீது வீசியது.

தீக்காயங்கள், வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் காரணமாக 1945 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மட்டும் 1,40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 3 நாட்களுக்குப் பிறகு , ஆகஸ்ட் 9இல் நாகசாகி மீது Fat Man என்ற இரண்டாவது அணு குண்டு வீசப்பட்டது.

அடுத்து வந்த சில நாட்களில், ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் நிபந்தனையற்ற சரணடைதலை அறிவித்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்

அணுஆயுதப் போரினால் ஏற்படும் மனிதப் பேரழிவுகளையும், தலைமுறை கடந்து கதிர்வீச்சால் அவதிப்படும் மனிதர்களின் துயரத்தையும் உலகிற்கு நினைவூட்டுகிறது.

உலகளவில் அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அமைதி மற்றும் வன்முறையற்ற பாதையை உருவாக்கவும் சர்வதேச சமூகத்தை ஒருங்கிணைக்கும் நாளாக இது அமைகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com