

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி , 'ஜாயிண்ட் ஆர்மி ஆக்ஷன் கமிட்டி' என்ற அமைப்பு கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, pok நிர்வாகம் இந்த அவ்வமைப்பை அமைப்பைத் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.
அரசின் தடையையும் மீறி, போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்து.
நேற்று வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்களை கலைக்கப் போலீசார் முயன்றபோது வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் 23 காவலர்கள் உட்பட 63 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
தடைசெய்யப்பட்ட அவ்வமைப்பை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதனிடையே இன்று (செவ்வாய்கிழமை) அங்கு முழு அடைப்புப் போராட்ட அறிவிப்பால் அசம்பாவிதங்களை தவிர்க்க நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, இணைய சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.