ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு- 11 பேர் கைது

அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.
ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு- 11 பேர் கைது
Published on

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது, அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

முதற்கட்டமாக, இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. 

இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

இதற்கிடையே, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் கார் துரத்தலை தொடர்ந்து, கொடிய தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகள் உட்பட 11 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட, இந்த கொடிய தாக்குதலை நடத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com