அமெரிக்கா: திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - குண்டு பாய்ந்து 12 பேர் படுகாயம்

இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
அமெரிக்கா: திருவிழாவில் துப்பாக்கிச்சூடு -  குண்டு பாய்ந்து 12 பேர் படுகாயம்
Published on

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் டொலிடோ என்ற நகரம் அமைந்துள்ளது.

இங்கு நேற்று மாலை 53வது Old West End பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டது.

மாலை 5:37 மணியளவில், டெலாவேர் மற்றும் கிளென்வுட் அவென்யூக்களுக்கு அருகே மக்கள் கூட்டமாக இருந்தபோது அங்கு இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதன்போது அங்கிருந்த பொதுமக்கள் 12 பேர் குண்டடிபட்டு படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், காயம் அடைந்தவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com