போர் நிறுத்தத்தை மதிக்காமல் லெபனான் மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் - டிரம்புக்கு ஈரான் அழுத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் செர்பிய நாட்டைச் சேர்ந்த அமைதிப்படை வீரர் ஒருவரும் பலியானார்.
போர் நிறுத்தத்தை மதிக்காமல் லெபனான் மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் - டிரம்புக்கு 
ஈரான் அழுத்தம்
Published on

ஒருபுறம் ஈரானுடன் அமெரிக்காவின் போருக்கு மத்தியில் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு மறுக்கிறது.

இதனால் இஸ்ரேல் - லெபனான் போரை நிறுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.

ஏற்கனவே எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் அண்மையில் மீண்டும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மற்றொரு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு நுழைய முடியாதபடி எல்லையில் பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் போனில் பேசியபோது டிரம்ப் கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மதிக்காமல் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

நேற்று அன்று சோஹ்மோர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் ஐக்கிய நாடுகள் சபையின் செர்பிய நாட்டைச் சேர்ந்த அமைதிப்படை வீரர் ஒருவரும் பலியானார்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் லெபனான் எல்லையை விட்டு முழுமையாக வெளியேறும் வரை போர்நிறுத்தத்தை ஏற்க முடியாது என்றும், தெற்கு லெபனான் பகுதியையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் டிமாண்ட் செய்துள்ளார்.

இதனிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "லெபனானையும் ஈரானையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டாம்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக உள்ளது." என்று எச்சரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com