ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் கொடுத்த புது அப்டேட்

விரைவில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுடன் பேசவிருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் கொடுத்த புது அப்டேட்
Published on

ஈரானில் நடக்கும் போருக்கு ஒரு மாபெரும் தீர்வு கையெழுத்தானவுடன் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், இந்த நிகழ்வு சில நாட்களுக்குள் நடக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

"ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வு கண்டுள்ளோம். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் ஹார்முஸ் நீரிணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். அது விரைவில், மிக விரைவில், ஒருவேளை ஐரோப்பாவில் இந்த வார இறுதியில் கூட நடக்கலாம்" என்று ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சற்று முன்பு பேசியதாகவும், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடனும் பேசியதாகவும் டிரம்ப் கூறினார். விரைவில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுடன் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"மிக முக்கியமாக, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்ற ஒப்பந்தம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதை அடைவதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் முழு நோக்கமே அதுதான். எனவே, இது ஒரு மிகப் பெரிய விஷயம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் "இறுதி அம்சங்களுக்கு" ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறிய டிரம்ப், முன்னதாக ஈரான் மீதான புதிய தாக்குதல்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.

ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்கவில்லை என்றாலும், தெஹ்ரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது இரவாக அமெரிக்க இராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று அதிபர் கூறிய சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com