இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான சேவைக்கு தடை- ஹாங்காங் அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் ஒமைக்ரான் பரவுவதால் விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

ஹாங்காங்:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் ஒமைக்ரான் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com