

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் லாங்விவ் நகரில் காகித ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் காகித ஆலையில் உள்ள ரசாயன தொட்டி ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது.
உடனே அங்கு அவசரக்கால மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்த சில தொழிலாளர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.