5 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி- பிரிட்டன் அறிவிப்பு

இதன்மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 லட்சம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியை பெறுகின்றனா்.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

லண்டன்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை உலக நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. முதலில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்பின் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி அறிமுகமானது. 

இந்நிலையில் தற்போது பிரிட்டனில் 5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரிட்டனில் வேகமாக பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்திகொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், கொரோனா அதிகம் பாதிக்கும் அபாயம் நிறைந்த 5 முதல் 11 வயது சிறார்களும் சோ்க்கப்பட்டுள்ளனா். 

சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற உடல்நலக் குறைபாடுகளை கொண்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம், சுமாா் 5 லட்சம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியை பெறுகின்றனா். 

இவ்வாறு பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com