பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் ரெயில் தடம் புரண்டது- பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்பு

விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் ரெயில் தடம் புரண்டது- பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்பு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டத்தில் இன்று பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், வேகமாக வந்த ரெயில் தடம்புரண்டது.

இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், ரெயில் பயணிகள் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு, விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com