அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சிறியரக விமானம்: 12 பேர் உயிரிழப்பு

விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சிறியரக விமானம்: 12 பேர் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பட்லர் நகரில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான விபத்து குறித்த தகவல்களை மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

12 பேர் பயணம்:

தகவல்களின் படி சிறிய ரக விமானம் அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது.

வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பட்லர் நினைவு விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிறிய ரக விமானத்தில் இருந்த அனைவரும் (மொத்தம் 12 பேர்) உயிரிழந்தனர்.

விசாரணை:

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் ஸ்கைடைவர், ஒருவர் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com