ஓசூரில் உலக முட்டை தினம் கொண்டாட்டம்

ஓசூரில் உலக முட்டை தினம் கொண்டாட்டப்பட்டது. இதில் 1500 முட்டைகள் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஓசூரில் உலக முட்டை தினம் கொண்டாட்டம்
Published on

ஓசூர்:

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓசூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் ஒரு அங்கமாக உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும், ஓசூர் அரசு ஆஸ்பத்திரியும் இணைந்து, நேற்று உலக முட்டை தினத்தை கொண்டாடின.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த இவ்விழாவிற்கு கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் மணி தலைமை தாங்கி பேசினார். அரசு ஆஸ்பத்திரியின் முதன்மை மருத்துவர் கீதா உள்பட பலர் பேசினார்கள். இதில், முட்டையின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் முட்டை ஒரு சத்தான, சைவ உணவு என்பதை உள், புற நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

விழாவில், கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியின் உள், புற நோயாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி 1500 முட்டைகள், கல்லூரியின் சார்பில் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முனைவர் ரமேஷ் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com