

ஹராரே:
2019 ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
2 முறை உலககோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் இதில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவானது.
மேலும் 9 நாடுகளும் கலந்து கொண்டன. இறுதிப்போட்டிக்கு நுழையும் 2 அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெறும்.
வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகள் சூப்பர் சிக்சுக்கு முன்னேறின. வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்று நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 5 ரன்னில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.
அந்த அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. வெஸ்ட்இண்டீசை நேற்று மழை வந்து காப்பற்றியது.
ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து 5 புள்ளியுடனும், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இதில் ஸ்காட்லாந்து அனைத்து ஆட்டமும் முடிந்துவிட்டது.
இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதுகின்றன. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலககோப்பைக்கு தகுதி பெறும்.
தோல்வி அடைந்தால் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகள் நாளை மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி உலககோப்பைக்கு முன்னேறும்.