உலக குத்துச்சண்டை: உடல் நலக் குறைவு காரணமாக ஷிவதபா விலகல்

உலக குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் கலந்த கொள்ள இருந்த ஷிவதபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.
உலக குத்துச்சண்டை: உடல் நலக் குறைவு காரணமாக ஷிவதபா விலகல்
Published on

ஷிவதபா

உலக குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா பங்கேற்க தகுதி பெற்று இருந்தார். நேரடியாக 2-வது சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருந்த ஷிவதபா, ஜார்ஜியா வீரர் ஒடார் இரானோஸ்யனை நேற்று சந்திக்க இருந்தார்.

ஆனால் உணவு விஷமாகி போனதால் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷிவதபா கடைசி நேரத்தில் களத்துக்கு வராமலேயே போட்டியில் இருந்து விலகினார். அசாமை சேர்ந்த 24 வயதான ஷிவதபா 2015-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கமும், ஆசிய போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பவர்களில் ஒருவராக கணிக்கப்பட்ட ஷிவதபாவின் விலகல் இந்திய அணிக்கு பெருத்த பேரிடியாக அமைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com