உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் கவுரவ் பிதுரி- பதக்கத்தை உறுதி செய்தார்

இந்திய குத்துச்சண்டை வீரர் கவுரவ் பிதுரி தனது அறிமுக உலக குத்துச்சண்டை தொடரிலேயே பதக்கத்தை உறுதி செய்து சாதனைப் படைத்துள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் கவுரவ் பிதுரி- பதக்கத்தை உறுதி செய்தார்
Published on

இந்த தொடரில் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கவுரவ் பிதுரி கலந்து கொண்டார். இதுதான் இவருக்கு முதல் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடராகும். முதல் தொடரிலேயே கவுரவ் பிதுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தகுதிச் சுற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய கவுரவ் பிதுரி, இன்று காலிறுதியில் துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை எதிர்கொண்டார். இதில் ஹம்தியை வீழ்த்தி கவுரவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் கவுரவ் பிதுரி ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் அறிமுக தொடரிலேயே பதக்கம் வெல்லும் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் விகாஸ் கிருஷ்ணன் 2011 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்றிருந்தார்.

இதற்கு முன் விகாஸ், விஜேந்தர் சிங் (2009), ஷிப தபா (2015) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர். ஆனால் அனைவரும் வெண்கல பதக்கமே வென்றுள்ளனர். இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் கவுரவ் பிதுரி வெள்ளி அல்லது தங்கம் வென்று சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com