கோட்டப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கோட்டப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சென்னையன் (வயது59). கூலித்தொழிலாளியான இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் சென்னையன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று செல்வி செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சென்னையன் திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். 

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சென்னையன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com