பாப்பாரப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பாப்பாரப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் கிருஷ்ணன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் அம்மன் ஏரி பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்தார்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com