ஸ்ரீவைகுண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஸ்ரீவைகுண்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

நெல்லை:

ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் வெள்ளத்துரை (வயது32). இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடன் பிரச்சினையும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் வெள்ளத்துரை விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு இறந்தார். 

இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com