தேவர்குளத்தில் தொழிலாளி மனைவி மாயம்

தேவர்குளத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள தேவர்குளம் வடக்கு அச்சம்பாட்டை சேர்ந்தவர் முருகன்(வயது 34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி (25). இருவருக்கும் இது 2-வது திருமணமாகும். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் மாலதி கடந்த 10-ந்தேதி சாம்பவர் வடகரையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேர மாகியும் அவர் வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் முருகன் விசாரித்துள்ளார். ஆனால் மாலதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தேவர்குளம் போலீசில் தனது மனைவி காணாமல் போனது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாலதியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com