உடுமலை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- முதியவர் கைது

உடுமலை அருகே நிலத்தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- முதியவர் கைது
Published on

உடுமலை:

உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (35) தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற பொன்னுசாமி (75) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி அரிவாளால் திருமூர்த்தி தலையில் வெட்டினார். இதில் அவரது காது பகுதியில் பலத்த வெட்டு காயம் விழுந்தது.

உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குமரலிங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com