கேலி, கிண்டல் தகராறில் தொழிலாளி கொலை: கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்த்தாண்டம் அருகே கேலி, கிண்டல் தகராறில் தொழிலாளியை கொலை செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
Published on

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு கல்லத்தான்விளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 42). இவரது மனைவி புஷ்பலதா (36). இவரை விரிகோடு மடத்துவிளையைச் சேர்ந்த ரெஜி (38), அவரது தம்பி ஷாஜி (34) ஆகியோர் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனை ராஜன் தட்டிக்கேட்டார். இதனால் ராஜனுக்கும், ரெஜி, ஷாஜி ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. 

கடந்த 5.5.2014 அன்று ராஜன் ஆலயத்துக்கு சென்று விட்டு தனது மனைவி புஷ்பலதா, சகோதர் விஜயகுமார் ஆகியோருடன் வந்து கொண்டு இருந்தார். மடத்துவிளை பகுதியில் வந்தபோது ராஜனை, ரெஜி, ஷாஜி ஆகியோர் மடக்கி சரமாரியாக தாக்கினர். அவர்களுடன் ரெஜியின் மனைவி அஜிதாவும் (34) சேர்ந்து ராஜனை தாக்கினார். இதில் ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். 

ராஜன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரெஜி, ஷாஜி, அஜிதா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நம்பி இன்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டடப்பட்ட ரெஜி, ஷாஜி, அஜிதா ஆகிய 3 பேருக்கம் ஆயுள் தண்டனை விதித்து அவர் தீர்ப்பு கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com