திருச்சியில் தொழிலாளி மாயம்- போலீசில் புகார்

திருச்சியில் வீட்டில் இருந்து வெளியே சென்ற தொழிலாளி மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

திருச்சி:

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. 

மனைவி சுசீலா கணவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து சுசீலா அரியமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்தரசு வழக்குப்பதிவு செய்து மாயமான கண்ணனை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com