கோவையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

கோவையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் நதீம் (வயது 34). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த நதீமின் உடல் நிலை திடீரென மிகவும் மோசமடைந்தது. இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நதீமை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com