திண்டுக்கல் அருகே காட்டுக்குள் எலும்புக்கூடாக தொழிலாளி பிணம் மீட்பு

திண்டுக்கல் அருகே காட்டுப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி பிணம்
தொழிலாளி பிணம்
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண்பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவருக்கு 55 வயது இருக்கும்.

அவர் இறந்து 25 நாட்கள் ஆகியிருக்கும் என்பதால் உடல் அழுகி எலும்புக்கூடுகள் மட்டுமே தென்பட்டன. உடனே போலீசார் அவற்றை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். உடலின் அருகே வி‌ஷ பாட்டில்களும் கிடந்தன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கூம்பூரை சேர்ந்த தொழிலாளி ராமசாமி(55) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக தன் மகளிடம் கூறி சென்றார்.

அதன்பிறகு அவரை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் எப்படி இறந்தார்? வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com