அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி 14-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி 14-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
Published on

இது தொடர்பாக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியுஷ் கோயல் கூறியதாவது:

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் சேவையை வரும் 2022 ஆண்டு சுதந்திர தினத்தன்று இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பான் அரசு நிதி உதவியுடன் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்கபட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுக்கின்றனர். 2023-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

2022-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றி ஆகஸ்ட் 15-ம் தேதி  அன்று புல்லட் ரெயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜப்பான் பிரதமர் 12-ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.

அகமதாபாத்-மும்பை இடையே இயக்கப்படும் இந்த புல்லட் ரெயில் 505 கி.மீ தூரத்திற்கு  2 மணி நேரத்தில் சென்றடையும். இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ என கூறப்படுகிறது. புல்லட் ரெயிலை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். சுமார் 300 ரெயில்வே ஊழியர்கள் ஜப்பானில் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com