ஊத்தங்கரை அருகே மர வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் மர வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது42). மரம் வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் நேற்று இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com