வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்களை கற்பழித்த வாலிபர் சென்னையில் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பெண்களை கற்பழித்த வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

பெங்களூரை அடுத்த உல்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், எனக்கு அறிமுகமான வாலிபர் ஒருவர் தன் பெயர் கார்த்தி ரெட்டி என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் என்றும், பல ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

எனக்கு அவரது நிறுவனத்தில் வேலை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். அதன்பின் என்னை மிரட்டி காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது எனது செல்போன் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார்.

பின்னர் எனது செல்போன் மூலமாகவே ஒரு ஓட்டலில் ரூம் புக் செய்து அங்கு என்னை அழைத்து சென்று சில நாட்கள் சிறை வைத்து கற்பழித்தார்.

இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார் என்று கூறி இருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேலும் ஒரு பெண் தனக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவித்தார். விசாரணையில் இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே வாலிபர் என்பது தெரியவந்தது.

ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளை வைத்து பெங்களூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.

உடனே பெங்களூர் போலீசார் சென்னைக்கு வந்து ஒரு ஓட்டலில் மானேஜராக வேலை பார்த்த கற்பழிப்பு குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜஹாங்கீர் என்பது தெரியவந்தது.

அவர் கார்த்திக் ரெட்டி, கிரண்ரெட்டி போன்ற போலி பெயர்களில் பெண்களை ஏமாற்றி உள்ளார். தன்னை பெங்களூரில் 2-வது பணக்காரர் என்றும், தனக்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி உள்ளார்.

பின்னர் பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து அவர்களிடம் இருந்து பணம், பொருட்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுபோல் அவர் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் கைவரிசையை காட்டி இருக்கிறார்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ ஜஹாங்கீர் எம்.பி.ஏ. பட்டதாரி. அவர் பல ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி கற்பழித்து வந்துள்ளார். இதுவரை 3 பெண்களை கற்பழித்துள்ளதாகவும், 3 பெண்களிடம் நகை-பணங்களை பறித்து சென்றுள்ளதாகவும் புகார் வந்துள்ளது.

இவர் மேலும் பல பெண்களிடம் கைவரிசை காட்டி இருக்கிறார் என்று சந்தேகிக்கிறோம். பயம் காரணமாக பலர் புகார் கொடுக்காமல் உள்ளனர். அவர்கள் தைரியமாக வந்து புகார் தெரிவிக்க வேண்டும். அவரது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com